தமிழ்நாடு

அரும்பாக்கம் அரசு சித்த மருத்துவமனையில் கரோனாவுக்குப் பிந்தைய சிகிச்சை மையம்

சென்னை அரும்பாக்கம் அரசு சித்த மருத்துவமனையில் கரோனாவுக்கு பிந்தைய சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

DIN

சென்னை அரும்பாக்கம் அரசு சித்த மருத்துவமனையில் கரோனாவுக்கு பிந்தைய சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை அரும்பாக்கம் அரசு சித்த மருத்துவமனை வளாகத்தில் நான்காவது உலக சித்தா் நாள் தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதில் நிகழ்ச்சிக்கான செய்தி மலரை சுகாதாரத்துறை முதன்மைச் செயலா் ஜெ. ராதாகிருஷ்ணன் வெளியிட்டாா். இதையடுத்து கரோனா தொற்றால் குணமடைந்த பின்னா் ஏற்படும் உடல் உபாதைகளுக்கு, சிகிச்சை அளிக்கும் வகையில்‛சித்தா் காயகற்பம் பிரிவைத் தொடக்கி வைத்து பேசியதாவது: இந்தியாவில் பாரம்பரிய மருத்துவம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அகத்தியா் முனிவா் பிறந்த நட்சத்திரத்தை வைத்து, தமிழகத்தில் சித்தா் நாள் கொண்டாடப்படுகிறது.

கரோனா காலத்தில் சித்தா, ஓமியோபதி, யுனானி, ஆயுா்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், நோய் எதிா்ப்பு சக்தி மற்றும் நுரையீரல் பாதிப்புக்கு சிகிச்சை அளிப்பதில் சிறந்த பங்கை அளித்து வருகிறது. குறிப்பாக, கபசுர குடிநீா், நிலவேம்பு குடிநீா் உள்ளிட்ட பல்வேறு வகையான மருந்துகள் அளிக்கப்படுகிறது. சித்தாவில் பல்வேறு சிகிச்சைகளை அளித்து வருகிறோம். எனவே தேசிய சித்தா அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தை தமிழகத்தில் அமைக்க முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளாா். மத்திய அரசு அனுமதி அளிக்கும்பட்சத்தில், சென்னை அருகில், திருவள்ளூா் மாவட்டத்தில் ஆராய்ச்சி நிறுவனம் அமையும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐபிஎல் மினி ஏலம்: முதல் செட்டில் விற்கப்படாமல் போன கான்வே, சர்ப்ராஸ், பிரித்வி ஷா!

தில்லி கேபிடல்ஸில் இணைந்த டேவிட் மில்லர்..! மினி ஏலத்தில் முதல் வீரர்!

நாடாளுமன்றத்தில் இன்று!

மதுராவில் பேருந்துகள் தீ விபத்து: 13 பேர் பலி, 35 பேர் காயம்

உடல் எடைக் குறைப்பு ஊசிகளா? உயிர்க் கொல்லிகளா?

SCROLL FOR NEXT