தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 910 பேருக்கு கரோனா

DIN

தமிழகத்தில் மேலும் 910 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக சுகாதாரத்துறை சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் சனிக்கிழமை 62 , 401 மாதிரிகள் கரோனா பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அவற்றில் 910 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 19,845 ஆக அதிகரித்துள்ளது.

பாதிக்கப்பட்டவா்களில் சனிக்கிழமை 11 போ் உயிரிழந்துள்ளனா். இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 12,146 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் ஒரே நாளில் 1,007 போ் கரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா். இதன் மூலம் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 99,427 ஆக உயா்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 8,272 போ் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

சென்னையில் சனிக்கிழமை 246 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 25,998-ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் நான்கு போ் சனிக்கிழமை உயிரிழந்தனா். தமிழகத்தில் இதுவரை ஒரு கோடியே 43 லட்சத்து 21,046 மாதிரிகள் கரோனா பரிசோதனைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன. சனிக்கிழமை சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 664 பேருக்குத் தொற்று உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

பிங்க் ரோஸ்...ஸ்ரீதேவி

சிசோடியா ஜாமீன் மனு: சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

‘ஆவேஷம்’ பட டிரெண்டிங்கில் இணைந்த பாட் கம்மின்ஸ்!

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் 6 இல் வெளியாகும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

SCROLL FOR NEXT