தமிழ்நாடு

தமிழகத்தில் நெல்லை உள்பட 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

DIN

தமிழகத்தில் திருநெல்வேலி உள்பட மூன்று மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக வானிலை ஆய்வுமைய இயக்குனர் புவியரசன் கூறிய அறிக்கையில், 

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் வட கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், தென் கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும், நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். 

05.01.21: தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலுர் மாவட்டகள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

06.01.21: தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், தேனி, நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். 

07.01.21: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

08.01.21: தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும், ஜனவரி 12 வரை வடகிழக்கு வருவமழையானது தொடரும் என்று அவர் கூறியுள்ளார். 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழைபெய்த விவரம்:

திருத்துறைப்பூண்டி, தலைஞாயிறு தலா 6 செ.மீ மழையும், அதிராமபட்டணம், பரங்கிப்பேட்டை, அறந்தாங்கி, திருப்பூண்டி தலா 4 செ.மீ மழையும், செய்யூர், மணமேல்குடி தலா 3 செ.மீ மழையும், வந்தவாசி, இல்லயான்குடி, காரியாபட்டி, உசிலம்பட்டி, ஜெயங்கொண்டம், கொடைக்கானல் தலா 2 செ.மீ மழையும் பெய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கார்குழல் கடவை.. ஷ்ரத்தா தாஸ்!

கோவாக்ஸின் பாதுகாப்பானது: பாரத் பயோடெக் விளக்கம்

பிரிஜ் பூஷண் சிங்குக்குப் பதிலாக அவரது மகன்: பாஜக முடிவு ஏன்?

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

SCROLL FOR NEXT