முகப்பு
தமிழ்நாடு

5 ஆயிரத்தை நெருங்குகிறது ஒரு கிராம் தங்கம்

சென்னையில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.208 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:12 PM
5 ஆயிரத்தை நெருங்குகிறது ஒரு கிராம் தங்கம்
பகிர்:

சென்னையில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.208 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. 

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, விலை குறைந்தாலும் கடந்த சில வாரங்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, திங்கள்கிழமையான நேற்று 38 ஆயிரத்தைக் கடந்த நிலையில், இன்று மேலும் உயர்ந்துள்ளது. 

ஜன.5-ம் தேதி நிலவரப்படி ஒரு சவரன் தங்கம் ரூ.208 உயர்ந்து, ரூ.38,728-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.26 உயா்ந்து, ரூ.4,841 ஆக உள்ளது. 

அதேநேரத்தில், வெள்ளி விலையில் மாற்றமில்லை. வெள்ளி கிராமுக்கு ரூ.74.10 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.74,100 ஆகவும் விற்பனையாகிறது. 

செவ்வாய்க்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................. 4,841

1 சவரன் தங்கம்...............................38,728

1 கிராம் வெள்ளி.............................74.10

1 கிலோ வெள்ளி.............................74,100

திங்கள்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................. 4,815

1 சவரன் தங்கம்...............................38,520

1 கிராம் வெள்ளி.............................74.10

1 கிலோ வெள்ளி.............................74,100

முழு கட்டுரையைப் படிக்க →