முகப்பு
தமிழ்நாடு

செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிர்ப்பு: கறவை மாடுகளுடன் மனு அளித்த விவசாயி

அவிநாசி அருகே அவிநாசிலிங்கம்பாளையத்தில் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து, கறவை மாடுகளுடன் வந்த விவசாயி வட்டாட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:12 PM
கறவை மாடுகளுடன் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த விவசாயி
பகிர்:

அவிநாசி அருகே அவிநாசிலிங்கம்பாளையத்தில் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து, கறவை மாடுகளுடன் வந்த விவசாயி வட்டாட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தார்.

இதுகுறித்து அவிநாசி ஒன்றியம் பழங்கரை ஊராட்சி அவிநாசிலிங்கம்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி பழனிச்சாமி என்பவர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பது..

நாங்கள் விவசாயத்தையே வாழ்வாதாரமாக நம்பி உள்ளோம். இந்நிலையில் எங்கள் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான நிலத்தில் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் விளைநிலங்கள், சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும், மேலும் அப்பகுதியில் மின்சாரக் கம்பிகளும் செல்வதால், ஆபத்தான சூழல் உருவாகும். குறிப்பாக நீதிமன்ற உத்தரவை பின்பற்றலும், மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெறாமலும் பணி நடைபெற்று வருகிறது. 

ஆகவே அப்பணியைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனர். இம்மனுவை பெற்றுக் கொண்ட வட்டாட்சியர் ஜெகநாதன், செல்லிப்பேசி அமைக்கும் பணி நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளோம். மேலும் உரிய அனுமதி பெற்ற பிறகு பணி துவக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →