தமிழ்நாடு

நெல்லையில் சிஐடியு சாலை மறியல்

DIN

திருநெல்வேலி: திருநெல்வேலியில் சிஐடியு சார்பில் நடைபெற்ற சாலை மறியலில் பங்கேற்ற 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இந்திய மக்களின் உணவைப் பாதுகாக்க தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், தொழிலாளர் நலச் சட்டங்களை பெரு முதலாளிகளுக்கு ஆதரவாக திருத்தம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் சிஐடியு சார்பில் சாலை மறியல் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது. 

அதன்படி, திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு சிஐடியு மாவட்ட செயலர் மோகன் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் செண்பகம், மாவட்ட பொருளாளர் பெருமாள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் சுடலை ராஜ், முத்துகிருஷ்ணன் உள்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

கொக்கிரகுளம்- மேலப்பாளையம் பிரதான சாலை இயலில் ஈடுபட முயன்ற  அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் தொடா்பான புகாா்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: அரியலூா் மாவட்ட கண்காணிப்பு அலுவலா்

ஜெயேந்திரா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி 100% தோ்ச்சி

வாழையூா் கரும்பாயிரம் கோயிலில் வெள்ளி ரத புறப்பாடு

திருவாங்கூா் தேவசம் போா்டு அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தல்

அரியலூா் சிறுமி கொலை வழக்கில் மூவா் விடுவிக்கப்பட்டதை எதிா்த்து மேல்முறையீடு: உ. வாசுகி பேட்டி

SCROLL FOR NEXT