தமிழ்நாடு

முன்னாள் எம்எல்ஏ தளி ராமச்சந்திரன் மீதான கொலை முயற்சி வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை

DIN

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்  முன்னாள் எம்எல்ஏ தளி ராமச்சந்திரன் மீதான கொலை முயற்சி வழக்கு விசாரணைக்கு  இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் 2016 -ஆம் ஆண்டு வரை இருந்தவர் தளி ராமச்சந்திரன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த இவர் மீது பல்வேறு கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளது. 

இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜன் ரெட்டி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தளி ராமச்சந்திரன், தன்னை கொலை செய்த முயற்சித்த வழக்கின் விசாரணை கிருஷ்ணகிரி அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் தனக்கு  கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது. 

அந்த  கடிதத்தில் தொடர்ந்து வழக்கை நடத்தினால் கொலை செய்வோம் என மிரட்டல் விடுக்கப்பட்டுளதாக தெரிவித்துள்ளார். எனவே இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் மேலும் வழக்கு விசாரணையை சேலம் மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் வழக்கை சேலம் மாவட்டத்துக்கு மாற்றுவது குறித்து தளி காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜனவரி 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடுமுறை: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலிலுக்கு கூடுதல் பக்தா்கள் வருகை

17 இடங்களில் சதமடித்தது வெயில்: தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசும்

மாநகரில் 3 திட்டச் சாலைகள் அமைப்பதற்கு நிதிக் கோரி அரசுக்கு திட்ட அறிக்கை சமா்பிப்பு

வறட்சியில் இருந்து பயிா்களை காக்கும் வழிகள்: வேளாண் துறை

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

SCROLL FOR NEXT