தமிழ்நாடு

திரையரங்கில் 100% ரசிகர்களை அனுமதிப்பது நல்லதல்ல: நீதிமன்றம்

DIN

பள்ளிகள் மூடியிருக்கும்போது திரையரங்குகளில் 100 சதவிகிதம் அனுமதிப்பது நல்லதல்ல என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

கரோனா பெருந்தொற்று சூழலில் திரையரங்கில் 100 சதவிகிதம் முழுமையாக ரசிகர்களை அனுமதிப்பதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், கரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் வரை தமிழக அரசு எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

திரையரங்கு விவகாரத்தில் குழந்தைகள் போன்று அரசு மெதுவாக அடியெடுத்து வைக்க வேண்டும் என்றும்,

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவுப்படி ஜனவரி 11-ஆம் தேதி வரை திரையரங்கில் 50 சதவிகித ரசிகர்கள் அனுமதியுடன் திரையரங்குகள் இயங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

மேலும், உயர்நீதிமன்றத்தில் உள்ள வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையே சேர்த்து விசாரிக்கும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

SCROLL FOR NEXT