புதுச்சேரி முதல்வர் வே.நாராயணசாமி தலைமையில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை புதுச்சேரியில் இருந்து வெளியேறக் கோரி போராட்டம் தொடங்கப்பட்டது. 
தமிழ்நாடு

ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து முதல்வர் தலைமையில் போராட்டம் தொடக்கம்

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை புதுச்சேரியில் இருந்து வெளியேறத் கோரி முதல்வர் வே.நாராயணசாமி தலைமையில் வெள்ளிக்கிழமை போராட்டம் தொடங்கப்பட்டது.

DIN


புதுச்சேரி: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை புதுச்சேரியில் இருந்து வெளியேறத் கோரி முதல்வர் வே.நாராயணசாமி தலைமையில் வெள்ளிக்கிழமை போராட்டம் தொடங்கப்பட்டது.

புதுச்சேரியில் மக்கள் நலத்திட்டங்களை தடுத்து நிறுத்தும் கிரண்பேடி வெளியேறக் கோரி ஆளுநர் மாளிகை முன்பு தர்ணா போராட்டம் நடத்த காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் அறிவித்தன.

இந்நிலையில், புதுச்சேரியில் பல்வேறு முக்கிய அலுவலகங்கள் முன்பு 144 தடை உத்தரவு புதன்கிழமை முதல் போடப்பட்டது.

ஆளுநர் மாளிகை பாதுகாப்புக்காக 3 கம்பெனிகள் கொண்ட துணை ராணுவப்படையினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

இதற்கிடையே புதுச்சேரி அண்ணா சிலை முதல் வெங்கட்ட சுப்பா ரெட்டியார் சிலை வரை போராட்டம் நடத்த காவல் துறை அனுமதி வழங்கியது.

இதைத்தொடர்ந்து வெள்ளிக்கிழமை முதல் ஜன.11 ஆம் தேதி வரை தொடர்ந்து போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. 

இதையடுத்து புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை முதல்வர் நாராயணசாமி தலைமையில் போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஆனால் பிரதான கூட்டணி கட்சியான திமுக பங்கேற்கவில்லை. கடந்த ஒரு மாதமாகவே காங்கிரஸ் தலைமையில் நடக்கும் போராட்டத்தை திமுக புறக்கணித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

தேவை இல்லை என்ற நிலையை உருவாக்கினால் மது ஒழிப்பு சாத்தியம் - சி. மகேந்திரன்

ஆம்பூரில் பலத்த மழை

விபத்தில் காயமடைந்த நபா் உயிரிழப்பு

நீட்தோ்வில் வெற்றி பெற்ற மலைக் கிராம மாணவா்!

SCROLL FOR NEXT