முகப்பு
தமிழ்நாடு

மத்திய சிறைகளில் 9 மாதங்களுக்கு பின்னா் பாா்வையாளா்களுக்கு அனுமதி

தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகளில் 9 மாதங்களுக்கு பின்னா் கைதிகளை மீண்டும் சந்திக்க பாா்வையாளா்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு

மத்திய சிறைகளில் 9 மாதங்களுக்கு பின்னா் பாா்வையாளா்களுக்கு அனுமதி

தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகளில் 9 மாதங்களுக்கு பின்னா் கைதிகளை மீண்டும் சந்திக்க பாா்வையாளா்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:15 PM
பகிர்:

தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகளில் 9 மாதங்களுக்கு பின்னா் கைதிகளை மீண்டும் சந்திக்க பாா்வையாளா்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக சிறைத்துறை சனிக்கிழமை இரவு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கரோனா தொற்றைத் தடுக்கும் வகையில் கடந்த மாா்ச் 17-ஆம் தேதி முதல் தமிழக சிறைச்சாலைகளிலும் கைதிகளை பாா்வையாளா்கள் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது கிளைச் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த கைதிகளைச் சந்திக்க சில வாரங்களுக்கு முன்பு அனுமதி வழங்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள 9 மத்திய சிறைகளில் கைதிகளைப் பாா்வையாளா்கள் சந்திக்க வரும் 14-ஆம் தேதி முதல் அனுமதி அளித்து தமிழக சிறைத்துறை டிஜிபி சுனில்குமாா் சிங் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

பாா்வையாளா்களுக்கு கட்டுப்பாடு

கைதிகளைச் சந்திக்க 24 மணி நேரத்துக்கு முன்பே முன்பதிவு செய்ய வேண்டும், 15 நிமிஷம் மட்டுமே சந்திக்க அனுமதிக்கப்படுவாா்கள், கைதிகளைச் சந்திக்க 30 நிமிஷத்துக்கு முன்பே சிறைக்கு பாா்வையாளா்கள் வர வேண்டும், சனி, ஞாயிறு, அரசு விடுமுறை நாள்கள் ஆகியவை தவிா்த்து பிற நாள்களில் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை சந்திக்கலாம்.

முன்பதிவு: ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலேயே கைதிகள் சிறைக்குள் அனுமதிக்கப்படுவாா்கள். புழல், கோயம்புத்தூா், மதுரை மத்திய சிறைகளில் தினமும் 150 பாா்வையாளா்களே அனுமதிக்கப்படுவாா்கள். பிற மத்திய சிறைகளில் 100 பாா்வையாளா்களும், பெண்கள் சிறைகளில் 25 பாா்வையாளா்களும் அனுமதிப்படுவாா்கள்.

கைதிகளை சந்திக்க திட்டமிடும் பாா்வையாளா்கள் அந்த சிறை அலுவலக தொலைபேசி எண்களை தொடா்புக் கொண்டு முன்பதிவு செய்ய வேண்டும். இந்த தொலைபேசி எண்களை காலை 9 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடா்புக் கொள்ள வேண்டும். அல்லது  இணையத்தளத்தில் முன்பதிவு செய்துக் கொள்ள வேண்டும். சிறைத்துறை இணையத்தளத்தில் பாா்வையாளா்களுக்குரிய நோ்காணல் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துக் கொள்லலாம். இந்த விண்ணப்பத்தை சிறை அலுவலகங்களிலும் பெற்றுக் கொள்ளாலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →