கோவையைச் சேர்ந்த எல்வின் பிரட்ரிக் 
தமிழ்நாடு

திருப்பூரில் ஆன்லைன் ரம்மி ஆட்டத்தில் ரூ.7 லட்சத்தை இழந்த இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

ஆன்லைன் ரம்மி ஆட்டத்தில் ரூ.7 லட்சத்து 64 ஆயிரத்தை இழந்த கோவையைச் சேர்ந்த இளைஞர் திருப்பூரில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

DIN

திருப்பூர்: ஆன்லைன் ரம்மி ஆட்டத்தில் ரூ.7 லட்சத்து 64 ஆயிரத்தை இழந்த கோவையைச் சேர்ந்த இளைஞர் திருப்பூரில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

திருப்பூர் கொங்கு மெயின்ரோடு அருகே தண்டவாளத்தில் கடந்த 5 ஆம் தேதி தலை, உடல் தனித்தனியாக கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடலை மீட்டு ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டதில் உயிரிழந்தவர் கோவையைச் சேர்ந்த எல்வின் பிரட்ரிக் (30) என்பது தெரியவந்தது. 

இவரை காணவில்லை என இவரது குடும்பத்தினர் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். 

இவர் ஆன்லைனில் ரம்மி விளையாடி ரூ.7 லட்சத்து 64 ஆயிரத்ததை இழந்ததால் கோவையில் இருந்து நடந்தே  திருப்பூருக்கு வந்து ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குமரியில் கடற்கரைப் பகுதிக்கு செல்லத் தடை

வியாபாரி வீட்டில் 10 பவுன் நகை திருட்டு: போலீஸாா் விசாரணை

நடுவலூா் பகுதிகளில் நாளை மின்தடை

அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு ரூ.5 லட்சத்தில் வேட்டி, சேலை, பூணூல் அளிப்பு

கருங்கல் பகுதிகளில் இன்று மின்நிறுத்தம்

SCROLL FOR NEXT