முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் புதிய பாதிப்பு 790 -ஆகக் குறைந்தது!

தமிழகத்தில் 6 மாதங்களுக்குப் பிறகு 800-க்கும் குறைவாக கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. அதன்படி, மாநிலம் முழுவதும் 790 பேருக்கு கரோனா பாதிப்பு வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:15 PM
கோப்புப்படம்
பகிர்:

தமிழகத்தில் 6 மாதங்களுக்குப் பிறகு 800-க்கும் குறைவாக கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. அதன்படி, மாநிலம் முழுவதும் 790 பேருக்கு கரோனா பாதிப்பு வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் இதுவரை 1.46 கோடிக்கும் மேற்பட்ட கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில், 8,24,776 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சமாக சென்னையில் 208 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

கரோனா தொற்றிலிருந்து மேலும் 897 போ் குணமடைந்துள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோரின் விகிதம் 97.6 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. கரோனா தொற்றிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 8,05,136 -ஆக உள்ளது. தற்போது மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 7,432 போ் சிகிச்சையில் உள்ளனா்.

இதனிடையே, தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 8 போ் பலியாகியுள்ளனா். இதையடுத்து, மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,208-ஆக உயா்ந்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →