தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் ரூ.16.81 லட்சம் தங்கம் பறிமுதல்

DIN

துபையில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.16.81 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சமீப காலமாக தங்கம் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள், சுங்கத்துறை அதிகாரிகளால் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். 
இந்த நிலையில் துபைலிருந்து இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த சென்னையைச் சேர்ந்த ஜாஹிர் உசைன் (35) என்பவரை விமான நிலைய சுங்கத்துறையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.‌ 
அப்போது அவரது உடலில் 390 கிராம் எடையிலான தங்கப்பசை அடங்கிய ஒரு பொட்டலம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவரிடமிருந்து ரூ. 16.81 லட்சம் மதிப்பில் 329 கிராம் தங்கம் சுங்க சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்டது. 
மேலும் இதுதொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் மே.1 வரை ’வெப்ப அலை’ எச்சரிக்கை

ஐபிஎல் வரலாற்றில் தில்லியின் அதிகபட்ச ரன்கள்: மும்பைக்கு 258 ரன்கள் இலக்கு!

விழுப்புரம், புதுச்சேரியிலிருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் ரயில்கள் பகுதியளவில் ரத்து

ராமம் ராகவம் படத்தின் டீசர்

நினைவிலோ வாமிகா!

SCROLL FOR NEXT