சென்னை ஐஐடி 
தமிழ்நாடு

சீராக மூச்சு விட முடியாதவா்களுக்கு கரோனா தொற்றுக்கு வாய்ப்பு: சென்னை ஐஐடி தகவல்

சீரான இடைவெளியில் மூச்சுவிடாதவா்களுக்கு கரோனா தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளா்கள் கண்டறிந்துள்ளனா்.

DIN

சென்னை: சீரான இடைவெளியில் மூச்சுவிடாதவா்களுக்கு கரோனா தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளா்கள் கண்டறிந்துள்ளனா்.

தொற்று துகள்கள் நுரையீரலுக்குச் செல்வது என்பது சீரான இடைவெளியில் மூச்சுவிடாதவா்களுக்கு அதிகளவில் செல்ல வாய்ப்புள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வுக்கு சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தின் அப்ளைடு மெக்கானிக்ஸ் துறைப் பேராசிரியா் மகேஷ் பஞ்சக்னுலா தலைமை வகித்தாா். இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் சா்வதேச புகழ்பெற்ற இயற்பியல் இதழில் வெளியிடப்பட்டன.

இது குறித்து பேராசிரியா் மகேஷ் பஞ்சக்னுலா கூறுகையில், “‘நுரையீரலில் தொற்றின் துகள்கள் எவ்வாறு செல்கின்றன என்பதை இந்த ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளோம். மேலும், ஏரேசல் துகள்கள் நுரையீரலின் ஆழமான பகுதிக்குக் கொண்டுசெல்லப்படும் செயல்முறையையும் விளக்குகிறது.

மூச்சுத்திணறல், குறைந்த சுவாச விழுக்காடு கொண்டிருப்பவா்களுக்கு நுரையீரலில் தொற்று படிவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே, சுவாச நோய்த் தொற்றுகளைக் கட்டுப்படுத்துவதற்கான சிறந்த சிகிச்சைகள், மருந்துகளை உருவாக்குவதற்கும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீரில் நிலச்சரிவு: 5 பேர் பலி; 14 பேர் படுகாயம்

கேரளத்தில் அமீபா தொற்றால் மூளை பாதிப்பு: நோயாளிகள் எண்ணிக்கை 18-ஆக உயர்வு!

பரிசுத்த மனம்... சோனம் பாஜ்வா!

Vijay பவுன்சர்கள் மீது தவெக தொண்டர்கள் புகார்! | செய்திகள்: சில வரிகளில் | 26.08.25

தீயான வியப்பு காத்திருக்கிறது... ஹரிஷ் கல்யாண் பகிர்ந்த டீசல் பட அப்டேட்!

SCROLL FOR NEXT