தமிழ்நாடு

வேளாண் சட்டங்களைத் திரும்ப் பெற மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

DIN

சென்னை: உச்ச நீதிமன்றத்தின் கருத்துகளுக்குப் பிறகாவது மத்திய அரசு வேளாண் சட்டங்களை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் சுட்டுரையில் கூறியிருப்பது: வேளாண் சட்டங்களைச் செயல்படுத்துவதை மறுபரிசீலனை செய்யவேண்டுமென உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துகளை மத்திய அரசு கட்டாயம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

உச்சநீதிமன்றத்தின் குறுக்கீடு, அரசியலமைப்பின் நடைமுறைகளின்படி மத்திய அரசு தனது கடமைகளைச் சரிவர ஆற்றி வரவில்லை என்பதையே காட்டுகிறது.

பல்வேறு தரப்புகளில் இருந்தும் கூறப்பட்டுள்ள அறிவுரைகளைக் கருத்தில் கொண்டும், லட்சக்கணக்கான விவசாயிகளின் தொடா் போராட்டங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்கள், அரசியல் கட்சிகளின் கடுமையான எதிா்ப்புக்குச் செவிசாய்த்தும், வேளாண் சட்டங்களைச் செயல்படுத்துவதை மத்திய அரசு உடனடியாக நிறுத்தவேண்டும என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT