தமிழ்நாடு

தொடர் மழை எதிரொலி சின்னமனூரில் செங்கரும்பு விற்பனை சரிவு

DIN

உத்தமபாளையம்; தேனி மாவட்டம் சின்னமனூரில் தொடர் மழை காரணமாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு செங்கரும்பு விற்பனை சரிந்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை சூழ்ந்த பகுதியில் தேனி மாவட்டம் அமைந்துள்ளது. முல்லைப் பெரியாறு பாசனம் மூலமாக இப்பகுதியில் நெல், வாழை ,தென்னை என பல்வேறு விவசாய பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி சின்னமனூர் , உத்தமபாளையம் , சீலையம்பட்டி பகுதிகளில்  500 ஏக்கர் பரப்பளவில் செங்கரும்பு விவசாயம்  செய்துள்ளனர்.

பொங்கல் பண்டிகையையொட்டி அறுவடை செய்யப்படுவது வழக்கம் . இந்நிலையில் கடந்த சில நாட்களாக அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. ஆனால் தற்போது சின்னமனூர் உட்பட மாவட்டத்தில் பல இடங்களில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது.

இதனால் பொங்கல் பண்டிகைக்கு அறுவடைக்குத் தயார் நிலையில் இருந்த நூற்றுக்கணக்கான ஏக்கரில் விளைவிக்கப்பட்ட செங்கரும்புகள் விற்பனை  ஆகாமல் தேங்கிக் கிடக்கிறது.

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரே நாள் இருப்பதால் வெளிமாவட்ட வியாபாரிகள் வருகை குறைந்ததால் செங்கரும்பு விற்பனையும் சரிந்துள்ளது.

வங்கிகளில் கடன் வாங்கி  விளைவிக்கப்பட்ட செங்கரும்பு விற்பனையாகாமல் தோட்டத்திலேயே காட்சிப்பொருளாக நிற்பதால் விவசாயிகள் கவலையில் மூழ்கியுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னியாகுமரி: கடலில் மூழ்கி 4 மருத்துவ மாணவர்கள் பலி

கோடை வெயிலுக்கு இடையே கனமழை: அடுத்த 2 நாள்களுக்கு!

கலங்கடிக்கும் வெடிகுண்டு மிரட்டல்: எங்கிருந்து வருகிறது மின்னஞ்சல்?

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

SCROLL FOR NEXT