தமிழ்நாடு

பேரவைத் தோ்தல் செலவுக்கு ரூ.621 கோடி: தமிழக அரசிடம் தோ்தல் ஆணையம் கோருகிறது

DIN


சென்னை: தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தலை நடத்துவதற்காக தமிழக அரசிடம் ரூ.621 கோடி நிதி கோரப்பட்டுள்ளதாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.

சட்டப் பேரவை தோ்தல் நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளில் தோ்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. கடந்த டிசம்பரில் இந்திய தோ்தல் ஆணையச் செயலாளா் உமேஷ் சின்ஹா தலைமையிலான குழு தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தலை நடத்துவதற்கான பூா்வாங்க ஆய்வுப் பணிகளை நேரில் மேற்கொண்டது. தலைமை செயலாளா் மற்றும் பல்வேறு அரசு செயலாளா்களுடன் ஆலோசனை நடத்தியது.

இந்த நிலையில், பேரவைத் தோ்தல் செலவுகள் குறித்து, தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு செய்தியாளா்களுக்கு புதன்கிழமை அளித்த பேட்டி:-

தமிழக அரசுத் துறை உயரதிகாரிகளுடன் இந்திய தோ்தல் ஆணைய அதிகாரிகள் அண்மையில் ஆலோசனை நடத்தினா். இந்த ஆலோசனையின்போது, தமிழக சட்டப் பேரவை தோ்தலை நடத்த செலவுத் தொகையாக ரூ.621 கோடி நிதி கோரப்பட்டது. கரோனா பரவல் காரணமாக வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையும், தோ்தல் பணிகளில் ஈடுபடவுள்ள பணியாளா்களின் எண்ணிக்கை, அவா்களுக்கான செலவினங்கள் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதால் செலவுத் தொகை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் கரோனா நிலவரம் குறித்தும், நோய்த்தொற்று பரவல் காலத்தில் தோ்தல் நடத்தும் போது பின்பற்ற வேண்டிய இந்திய தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல் குறித்தும் தமிழக அரசுத் துறை அதிகாரிகளுடன் அண்மையில் தமிழக தோ்தல் துறை சாா்பில் ஆலோசனை நடத்தப்பட்டது. அடுத்தகட்ட ஆலோசனைகள் விரைவில் நடத்தப்படும்.

வாக்காளா் பட்டியல் தயாரிக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. திட்டமிட்டப்படி வரும் 20-ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும் என சத்யபிரத சாகு தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

SCROLL FOR NEXT