முகப்பு
தொடர் மழையால் நிரம்பிய சண்முகா நதி அணை நீர்த்தேக்கம்.
தமிழ்நாடு

சண்முகா நதி அணை நீர்த்தேக்கம் 2-வது முறையாக நிரம்பியது

தேனி மாவட்டம் உத்தம பாளையம் அருகே ராயப்பன்பட்டி சண்முகா நதி அணை நீர்த்தேக்கம் 2ஆம் முறையாக நிரம்பி மறுகால் செல்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:17 PM
தொடர் மழையால் நிரம்பிய சண்முகா நதி அணை நீர்த்தேக்கம்.
பகிர்:

தேனி மாவட்டம் உத்தம பாளையம் அருகே ராயப்பன்பட்டி சண்முகா நதி அணை நீர்த்தேக்கம் 2ஆம் முறையாக நிரம்பி மறுகால் செல்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ராயப்பன்பட்டி அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சண்முகா நதி நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. 52.50 அடி உயரம் கொண்ட இந்த நீர்த்தேக்கத்திற்கு ஹைவேஸ் -மேகமலை, பெருமாள் மலை ,சுருளி மலை பகுதிகளில் பெய்யும் மழை நீரே முக்கிய நீர்வரத்து ஆகும். 

கடந்த மாதம் பெய்த தொடர் மழை காரணமாக அணையின் முழு கொள்ளளவு எட்டியதால் பாசனத்திற்குத் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் 44 அடியாகக் குறைந்தது. இதற்கிடையே கடந்த சில நாள்களாக ஹைவேஸ்-மேகமலை பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் சண்முகாநதி அணை நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து ஏற்பட்டது. இ

தனையடுத்து  சண்முகா நதி அணை நீர்த்தேக்கம் 2ஆம் முறையாக நிரம்பி மறுகால் பாய்கிறது. தற்போது 700 கனஅடி நீர் வரத்தால் ஒரே நாளில் 6 அடி நீர்மட்டம் உயர்ந்தது. தற்போது  உபரி நீராக மறுகால் செல்லும் மழைநீர் முல்லைப்பெரியாறு நோக்கிப் பாய்ந்து செல்கிறது.

முழு கட்டுரையைப் படிக்க →