தமிழ்நாடு

தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டாக அறிவிக்கப்படும்: கனிமொழி

DIN

சென்னை: திமுக ஆட்சியில் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டாக அறிவிக்கப்படும் என்று நாடாளுமன்றத் திமுக குழுத் துணைத் தலைவர் கனிமொழி கூறினார்.
திமுக சார்பில் சென்னை தியாகராய நகரில் புதன்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்ற அவர், நல உதவிகளை வழங்கி பேசியது: 
தமிழகம் வெற்றிநடை போட வேண்டும் என்றால் மு.க.ஸ்டாலின் தலைமையில்  திமுக ஆட்சி அமைய வேண்டும். வரப் போகும் தேர்தல் தமிழர்களின் சுயமரியாதை மீட்டெடுக்கப் போகும் தேர்தல்.
தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் இரண்டுமே தமிழர்களுக்கு மிக முக்கியமானது. தமிழ்ப் புத்தாண்டு என்பது தமிழர்களின் சுயமரியாதை, அடையாளமாகும். திமுக ஆட்சி விரைவில் அமையும். அப்போது நிச்சயமாக தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டாக அறிவிக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

கனடா சாலை விபத்தில் இறந்த இந்திய தம்பதி அடையாளம் தெரிந்தது

SCROLL FOR NEXT