தமிழ்நாடு

ஜல்லிக்கட்டு மாட்டை அவிழ்த்து விடுவதில் தகராறு: இருவருக்கு கத்திக்குத்து

DIN

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாட்டை முதலில் அவிழ்த்து விடுவதில் ஏற்பட்ட தகராறில் இருவருக்கு கத்திக்குத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் காளைகளை அவிழ்த்து விடுவதில் நடந்த சண்டையில் இருவருக்கு கத்திக்குத்து, கரடிக்கல் பெருமாள்பட்டியை சேர்ந்தவர் அருண்குமார்(27), தேவேந்திரன் (25).

இவர்கள் இருவரும் ஜல்லிக்கட்டு போட்டிக்களத்தில் தங்கள் மாட்டை அவிழ்த்து விடுவதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்த பொழுது, மாட்டின் உரிமையாளர்களுக்குள் முன்னெடுத்து விடுவதில் ஏற்பட்ட தகராறில் இருவருக்கும் கத்திகுத்து ஏற்பட்டது.

தொடர்ந்து அவர்கள் இருவரும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்தனர். இருவருக்கும் காயம் பலமாக ஏற்பட்ட காரணத்தால் அவர்கள் இருவரையும் காவல்துறையினர் ஆம்புலன்ஸ் மூலம் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து சம்பவம் குறித்து ஒருவரை காவல்துறையினர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT