மாட்டுபொங்கலை முன்னிட்டு மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிகட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.
போட்டி தொடங்குவதற்கு முன்பாக வீரர்கள் உறுதிமொழி எடுத்துகொண்டனர்.
இதையடுத்து முதலில் பாலமேடு கிராம கோவில்களுக்கு சொந்தமான காளைகள் அவிழ்க்கப்பட்டு பின்னர் போட்டியில் வரிசையாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டு வருகிறது.
வெள்ளிக்கிழமை காலை 10 மணி நிலவரப்படி, 120க்கும் மேற்பட்ட காளைகளும், 150 மாடுபிடி வீரர்களும் களம் கண்டுள்ளனர். இதுவரை மாடுபிடி வீரர்கள் 7 பேர் பலத்த காயமடைந்த நிலையில் அரசு மருத்துவமனைக்கு கொன்டுசெல்லப்பட்டனர்.
போட்டியில் ஜல்லிகட்டு காளைகளே மாடுபிடி வீரர்களை மிரட்டி வருகிறது. வீரர்களும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
போட்டியானது மாலை 4 மணி வரை நடைபெறும். 1 மணி நேரத்திற்கு 75 வீரர்கள் வீதம் களம் இறக்கப்பட்டு வருகின்றனர்.
போட்டியில் கலந்து கொண்டு சிறப்பாக களம் காணும் வீரர்கள் மற்றும் பிடிபடாத காளைகளுக்கு கார், காங்கேயம் பசு, எல்.இ.டி டிவி, பிரிட்ஜ், தங்க காசு, டூவிலர், கட்டில் மெத்தை, சைக்கிள் என எண்ணற்ற பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
ஜல்லிக்கட்டில் காயமடையும் வீரர்களுக்கு மருத்துவ உதவிகளுக்காக பாலமேடு வட்டார மருத்துவ அதிகாரி வளர்மதி தலைமையில் 12 மருத்துவர்கள், 16 செவிலியர்கள், உதவியாளர்கள் 21 பாலமேடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முகாமிட்டுள்ளனர்.
அதனை தொடர்ந்து மதுரை ராஜாஜி மருத்துவ மனையின் 6 சிறப்பு மருத்துவர்கள், உசிலம்பட்டி வட்டார சுகாதார நிலையத்தில் இருந்து 6 மருத்துவர்கள், மற்றும் அவர்களுடன் செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்கள்
ஜல்லிக்கட்டு களத்தை சுற்றி உள்ளனர்.
இவை தவிர 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் 16 களத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.