த.மா.கா. துணைத் தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் காலமானார் 
தமிழ்நாடு

த.மா.கா. துணைத் தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் காலமானார்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான ஞானதேசிகன் உடல் நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 71.

DIN


சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான ஞானதேசிகன் உடல் நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 71.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக இருந்த பி.எஸ். ஞானதேசிகன், உடல் நலக் குறைவு காரணமாக கடந்த நவம்பர் 11-ஆம் தேதி முதல் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானார்.

2001-ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் இருந்து இரண்டு முறை மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டவர். 2009-ஆம் ஆண்டு முதல் 2013-ஆம் ஆண்டு வரை தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர்.

1949-ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்த ஞானதேசிகனுக்கு திலகவதி என்ற மனைவியும் இரண்டு பிள்ளைகளும் உள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வ.ரா.வின் பார்வையில் பாரதி!

இன்று 650 விமானங்கள் ரத்து; பிரச்னைகள் படிப்படியாக சரி செய்யப்படுகிறது: இண்டிகோ சிஇஓ

கோவாவில் இரவு விடுதி தீ விபத்து சம்பவம்: அமித் ஷா இரங்கல்

அறவழியில் செயல்பட வேண்டும்

“விருச்சிகம் ராசி நேயர்களே!" இந்த வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

SCROLL FOR NEXT