தமிழ்நாடு

கோவை காருண்யா பல்கலை.யில் வருமான வரித்துறை சோதனை

க. தென்னிலவன்

கோவை காருண்யா பல்கலைக்கழகத்தில் வருமான வரித்துறை டி.எஸ்.பி. தலைமையில் 30-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சுமார் 5 மணி நேரமாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

வரி ஏய்ப்பு புகாரை அடுத்து சென்னை, கோவை உள்பட தமிழகம் முழுவதும் காருண்யா நிறுவனத்திற்கு சொந்தமான 28 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

கோவையில் காருண்யா பல்கலைக்கழகத்தில் வருமானவரித்துறை டி.எஸ்.பி. தலைமையிலான 30-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

பல்கலைக்கழக வளாகத்திற்குள் வரும் அனைத்து வாகனங்களும் முழுமையான சோதனைக்கு பின் உள்ளே அனுமதிக்கப்படுகின்றன. மேலும் செல்போன்களை எடுத்துச் செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக இந்த வருமான வரித்துறை சோதனையானது நடந்து வருகிறது. 

தொடர் சோதனை நடந்து வரும் நிலையில் அங்கு காவல்துறை பாதுகாப்பு போடுவதற்கான நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT