ஜன. 28ல் புதுச்சேரி வருகிறார் ஜெ.பி.நட்டா
பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா வருகிற 28 ஆம் தேதி புதுச்சேரி வரவிருப்பதாக புதுச்சேரி பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் தகவல் தெரிவித்துள்ளார்.
பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா வருகிற 28 ஆம் தேதி புதுச்சேரி வரவிருப்பதாக புதுச்சேரி பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ளதை அடுத்து, தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. தேசியக் கட்சிகளின் தலைவர்களும் தமிழகத்தில் படையெடுத்து வருகின்றனர்.
அந்தவகையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காலூன்ற பாஜக முயற்சி செய்து வருகிறது. பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கடந்த ஜனவரி 14 ஆம் தேதி தமிழகம் வந்தார். சென்னையில் பாஜக சார்பாக நடைபெறும் பொங்கல் விழா மற்றும் துக்ளக் பத்திரிக்கையின் ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக வந்த அவர் பாஜகவினருடன் தேர்தல் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டார்.
இதையடுத்து, சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த ஆலோசனைகளை மேற்கொள்ள ஜெ.பி.நட்டா வருகிற 28 ஆம் தேதி புதுச்சேரி வரவுள்ளார். புதுச்சேரி பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.