முகப்பு
தமிழ்நாடு

பீடி வாங்கிவர தாமதம்: தந்தையால் தீ வைக்கப்பட்ட சிறுவன் பலி

தந்தையால் தீ வைக்கப்பட்டு, படுகாயத்துடன் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 10 வயது சிறுவன், சிகிச்சை பலனின்றி பலியானார்.

Updated On : 21 ஜனவரி, 2021 at 3:11 PM
ஹைதராபாத்தில் தந்தையால் தீ வைக்கப்பட்ட 10 வயது சிறுவன் பலி
பகிர்:


தந்தையால் தீ வைக்கப்பட்டு, படுகாயத்துடன் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 10 வயது சிறுவன், சிகிச்சை பலனின்றி பலியானார்.

சைபராபாத் பகுதியைச் சேர்ந்த குடிப்பழக்கத்துக்கு அடிமையான பாலு, தனது மகன் சரணிடம் பீடி வாங்கச் சொல்லியிருக்கிறார். அவன் தாமதமாக பீடி வாங்கி வந்த ஆத்திரத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மகனை தீ வைத்துக் கொளுத்தியிருக்கிறார்.

உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த திங்கள் கிழமை வரை சிறுவன் நன்றாக பேசியுள்ளான். தன்னை அடித்துத் துன்புறுத்தி, தந்தையே தீ வைத்துக் கொளுத்தியதாக நீதிபதியிடம் வாக்குமூலமும் கொடுத்துள்ளார்.  இதற்கிடையே அவனது நிலைமை மோசமாகி இன்று உயிரிழந்தார்.

Advertisement

உடனடியாக பாலு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.