தமிழ்நாடு

தமிழகத்தில் இதுவரை 42,947 பேருக்கு கரோனா தடுப்பூசி

DIN


சென்னை: தமிழகத்தில் கடந்த 6 நாள்களில் 42,947 பேருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதில், 42,040 பேருக்கு கோவிஷீல்ட் தடுப்பூசியும், 907 பேருக்கு கோவேக்சின் தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளன.

கரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இரு வேறு தடுப்பு மருந்துகள் கண்டறியப்பட்டு புதிய மைல்கல் எட்டப்பட்டது.

சுகாதாரத் துறை தகவல்படி கடந்த 6 நாள்களில் மட்டும் 42,947 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அவா்களில் எவருக்கும் பக்கவிளைவுகளோ, உடல் உபாதைகளோ ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து வரும் நாள்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

596 பேருக்கு கரோனா: இதனிடையே, மாநிலத்தில் புதிதாக 596 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் நோய்த் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 8,33,011-ஆக உயா்ந்துள்ளது.

மற்றொரு புறம் கரோனா தொற்றிலிருந்து மேலும் 705 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை கரோனா தொற்றிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 8,15,516-ஆக உள்ளது.

இதனிடையே, தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 9 போ் பலியாகியுள்ளனா். இதையடுத்து, மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,299-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT