தமிழ்நாடு

பேரறிவாளன் விடுதலை; தமிழக அரசு கூடுதல் அழுத்தம் தர வேண்டும் - ராமதாஸ்

DIN

பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் ஆளுநரிடம் தமிழக அரசு மீண்டும் கூடுதல் அழுத்தம் தர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து அவர் தனது சுட்டுரையில், பேரறிவாளன் விடுதலை வழக்கில் உச்சநீதிமன்றம் காட்டிய கண்டிப்பும், அதைத் தொடர்ந்து மத்திய அரசு அதன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டிருப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது. அடுத்த சில நாள்களில் நல்லது நடக்கும் என நம்புவோம். புதிய வாரம் புதிய நம்பிக்கை அளிக்கும்!

பேரறிவாளன் விடுதலை குறித்து அடுத்த 4 நாள்களில் ஆளுநர் முடிவெடுப்பார் என்று மத்திய அரசு உறுதியளித்துள்ள நிலையில், அந்த முடிவு  நல்ல முடிவாக இருக்க வேண்டும் என்று தமிழக ஆளுநரிடம் தமிழக அரசு மீண்டும் கூடுதல் அழுத்தம் தர வேண்டும்!

பேரறிவாளன் விடுதலையைத் தொடர்ந்து  மீதமுள்ள  6 தமிழர்களையும் விடுதலை செய்ய ஆளுநர் ஆணையிட வேண்டும். இவை அனைத்தும் நடப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆந்திரத்தின் நிா்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம்: ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வாக்குறுதி

கேரளத்தில் வாக்குப் பதிவு சரிவு: ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள்: அமெரிக்கா முடிவு

மூதாட்டி கொலை வழக்கு: மகன் கைது

கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் பதில்

SCROLL FOR NEXT