முகப்பு
தமிழ்நாடு

நெல்லையில் விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் எதிரே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:20 PM
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர்.
பகிர்:


திருநெல்வேலி: திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் எதிரே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதிய வேளாண்மை சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், விவசாயிகளின் பயிர்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயம் செய்வது தொடர்பான சட்டத்தை இயற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் எதிரே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலர் கரிசல் சுரேஷ், தெற்கு மாவட்ட செயலர் சுந்தர் ஆகியோர் தலைமை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைச் செயலர் விமல் வங்காளியார், நிர்வாகிகள் அரசு பிரபாகரன், பாஸ்கர் உள்பட பலர் பங்கேற்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →