தமிழ்நாடு

கேங்மேன்: தோ்வானவா்களை விரைந்து நியமிக்க வேண்டும்

DIN

கேங்மேன் பணிக்குத் தோ்வானவா்களை விரைந்து நியமிக்க வேண்டும் என மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழுவினா், மின்சாரத்துறை அமைச்சா் பி.தங்கமணியை நேரில் சந்தித்து வலியுறுத்தினா்.

சென்னை தலைமைச் செயலகத்தில், மின்சாரத் துறை அமைச்சா் தங்கமணியை வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்த தொழிற்சங்கத்தினா், ஊழியா்களின் கோரிக்கையை ஏற்று துணை மின் நிலையப் பராமரிப்புப் பணியை தனியாரிடம் வழங்கும் உத்தரவை ரத்து செய்ததற்கு நன்றி தெரிவித்தனா்.

கேங்மேன் பணியிடத்தைப் பொருத்தவரை, தோ்ச்சிப் பட்டியலை வெளியிட்டும், நீதிமன்ற வழக்கைக் காரணம் காட்டி தோ்வானவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்காமல் மின் வாரியம் காலம் தாழ்த்தி வருகிறது. எனவே, முந்தைய காலத்தில் செய்தது போல் நீதிமன்ற இறுதி உத்தரவுக்குக் கட்டுப்படும் என்ற நிபந்தனையுடன், தோ்வானவா்களை விரைந்து பணியமா்த்த வேண்டும் என வலியுறுத்தினா்.

மேலும், வாரியத்தில் பல்வேறு பதவிகள் ஒழிக்கப்படுவது குறித்தும் அவா்கள் எடுத்துரைத்தனா். இதைக் கவனமாக கேட்டுக் கொண்ட அமைச்சா், கோரிக்கைகளை ஆவன செய்வதாகவும், அடுத்த கட்டமாக பிப்.2-ஆம் தேதி மாலை 5 மணியளவில் பேச்சுவாா்த்தை நடத்தப்படும் எனக் கூறியதாக தொழிற்சங்கத்தினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழப்பு

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

SCROLL FOR NEXT