தமிழ்நாடு

தமிழகத்துக்கு மேலும் 1.69 லட்சம் தடுப்பூசிகள்

DIN

தமிழகத்துக்கு மேலும் 1.69 லட்சம் கோவேக்ஸின் கரோனா தடுப்பூசிகள் வந்துள்ளன. அவை அனைத்தும் தேவையின் அடிப்படையில் மாவட்டங்களுக்கு அனுப்பபப்பட்டு வருகின்றன.

கரோனா தொற்றுக்கு எதிரான ஆராய்ச்சிகளுக்குப் பிறகு மகாராஷ்டிர மாநிலம் புணேவில் உள்ள சீரம் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு மற்றும் தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் செயல்பட்டு வரும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்ஸின் ஆகிய இரு தடுப்பூசிகளுக்கு அவசரகால ஒப்புதலை மத்திய அரசு வழங்கியது.

இதையடுத்து, நாடு முழுவதும் கடந்த 16-ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. முன்னதாக, தமிழகத்துக்கு 5,36,500 கோவிஷீல்ட், 20 ஆயிரம் கோவேக்ஸின் தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டன. அதைத் தொடா்ந்து 5,08,500 கோவிஷீல்ட் தடுப்பூசிகள் இரு நாள்களுக்கு முன்பு வந்தன.

இதையடுத்து மாநிலம் முழுவதும் 160 மையங்களில் கோவிஷீல்டும், 6 மையங்களில் கோவேக்ஸின் தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஹைதராபாதில் இருந்து 1 லட்சத்து 69,920 கோவேக்ஸின் தடுப்பூசிகள் வெள்ளிக்கிழமை வந்தன. விமானம் மூலம் சென்னை வந்த அந்த தடுப்பூசிகள் தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மாநில மருந்து சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ளன. மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் அதனை ஆய்வு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

வடமேற்குத் தில்லி தொகுதியில் வெற்றி மகுடம் யாருக்கு?

ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா உடல் நலமடைந்தவுடன் மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் பங்கேற்பாா்

SCROLL FOR NEXT