தமிழ்நாடு

சிறுமியுடன் ஆர்வமாக செல்பி எடுத்த ராகுல் காந்தி

DIN

கரூரில் பிரசாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி அங்கு வந்திருந்த சிறுமியை காரின் மேல்தளத்திற்கு ஏற்றி செல்பி எடுத்துக் கொண்டார்.

கரூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை 'தமிழகம் மீட்க, விவசாயம் காக்க; 'வாங்க 'ஒரு கை பார்ப்போம்' என்ற தலைப்பில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட காங்கிரஸ் எம்.பி.  ராகுல் காந்தி கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் மக்கள் மத்தியில் பேசினார். 

அங்கு பிரசாரத்தை முடித்துக்கொண்டு வாங்கல் மாரிக்கவுண்டம்பாளையத்தில் நடைபெற்ற விவசாயிகளை சந்திப்பு நிகழ்ச்சிக்காக காரில் ஏறியபோது, அங்கு ஆவலுடன் தன்னை பார்க்க வந்த சிறுமியை கவனித்தார். 

பின்னர் சிறுமியை காரின் மேல்தளத்திற்கு ஏற்றி செல்பி எடுத்துக் கொண்டார். தொடர்ந்து வாங்கல் மாரிக்கவுண்டம்பாளையத்தில் விவசாயிகளை சந்தித்த பின் மதியம் 2 மணியளவில் அரவக்குறிச்சி செல்லும் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மலைக்கோவிலூர் அருகே உள்ள மண்பானை சமையல் ஓட்டலில் மதிய சாப்பாடு சாப்பிட்டார். அப்போது உணவு ருசியாக இருப்பதாக தெரிவித்தார்.

இன்றுடன் மூன்று நாள் தமிழக பிரசாரம் முடிவடையும் நிலையில் ராகுல் காந்தி இன்று மாலை மதுரை விமான நிலையத்திற்குச்  சென்று அங்கிருந்து தில்லி திரும்புகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.யில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெறும்: ராகுல் காந்தி

பிபவ் குமார் விவகாரம்: தில்லி காவல் துறை பொய் கூறுவது ஏன்? ஆம் ஆத்மி

திரைக்கதிர்

சன் ரைசர்ஸுக்கு 215 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பஞ்சாப் கிங்ஸ்!

பிரதமர் மோடி ஓய்வு பெற்றால் தான் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT