முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 523 பேருக்கு கரோனா

​தமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 523 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:23 PM
கோப்புப்படம்
பகிர்:


தமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 523 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. மாநிலத்தில் புதிதாக 523 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 595 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், 5 பேர் பலியாகியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,35,803 ஆக உயர்ந்துள்ளது. இதில் 8,18,742 பேர் குணமடைந்துள்ளனர், 12,325 பேர் பலியாகியுள்ளனர். இன்றைய தேதியில் 4.736 பேர் மட்டுமே இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement

அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று 168 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments