முகப்பு
தமிழ்நாடு

சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டிய அதிமுக நிர்வாகி நீக்கம்!

சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டிய திருநெல்வேலி மாவட்ட அதிமுக நிர்வாகி சுப்பிரமணிய ராஜா கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:23 PM
அதிமுக நிர்வாகி தரப்பில் சசிகலாவை வரவேற்று ஒட்டிய போஸ்டர்
பகிர்:

சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டிய திருநெல்வேலி மாவட்ட அதிமுக நிர்வாகி சுப்பிரமணிய ராஜா, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக அதிமுக அறிக்கை வெளியிட்டுள்ளது. 

நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனைக்குப் பிறகு இன்று விடுதலையான சசிகலாவை வரவேற்று திருநெல்வேலி மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் சுப்பிரமணிய ராஜா போஸ்டர் ஒட்டியிருந்தார். 

இதையடுத்து கட்சியின் கொள்கை- குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதால், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்துகொண்டதாலும், கழகத்திற்கு அவப்பெயர் உண்டாகும் விதத்தில் நடந்துகொண்டதாலும் சுப்ரமணிய ராஜா, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்,  கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்றும் அதிமுக தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →