நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞர் அணிச் செயலாளர் வழக்கறிஞர் இரா.ராஜீவ்காந்தி திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். 
தமிழ்நாடு

திமுகவில் இணைந்தார் நாம் தமிழர் கட்சியின் ராஜீவ் காந்தி!

நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞர் அணிச் செயலாளர் வழக்கறிஞர் இரா.ராஜீவ்காந்தி திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

DIN

சென்னை: நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞர் அணிச் செயலாளர் வழக்கறிஞர் இரா.ராஜீவ்காந்தி திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

இதுதொடர்பாக திமுகவின் தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கழகத் தலைவர் ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் இன்று (27.1.2021), மாலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில்,   இராமநாதபுரம் மாவட்டம், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மாநில இளைஞர் அணிச் செயலாளர் வழக்கறிஞர் இரா.ராஜீவ்காந்தி - மாநில மாணவர் அணிச் செயலாளர் வழக்கறிஞர் சு.அமர்நாத் - வழக்கறிஞர் பாசறை பொறுப்பாளர் வழக்கறிஞர் மு.இரமேஷ் -  திருவாடானை தொகுதி பொருளாளர் தேர்போகி பாண்டி ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.

அதுபோது கழக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தலைமைக் கழக சட்ட ஆலோசகர் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, இராமநாதபுரம் மாவட்டக் கழகப் பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், வெளிநாடுவாழ் இந்தியர் அணி இணைச் செயலாளர் டாக்டர் செந்தில்குமார், எம்.பி., சட்டதிட்ட திருத்தக்குழு இணைச் செயலாளர் வழக்கறிஞர் அ.சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காந்தி பாதையைத் தொடர்ந்து பின்பற்றுவோம்! மோடி

பாகிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்!

ஆசியக் கோப்பையை ஐக்கிய அமீரகத்திடம் ஒப்படைத்தார் நக்வி!

மியான்மரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.1 ஆகப் பதிவு

நாக்பூரில் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு நிறைவு விழா! ராம்நாத் கோவிந்த் பங்கேற்பு!

SCROLL FOR NEXT