முகப்பு
தமிழ்நாடு

சசிகலா விடுதலை: தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அமமுகவினர் கொண்டாட்டம்!

சசிகலா விடுதலையையொட்டி, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அமமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:23 PM
செங்கல்பட்டில் அமமுகவினர் கொண்டாட்டம்
பகிர்:

சசிகலா விடுதலையையொட்டி, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அமமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். 

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று பெங்களூரு- பரப்பன அக்ரஹாராத்தில் உள்ள மத்திய சிறையில் இருந்த சசிகலா இன்று (ஜன. 27) விடுதலையானார்.

இதையடுத்து சசிகலாவை வரவேற்கும் விதமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அமமுகவினர் கொண்டாடி வருகின்றனர். பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் அவர்கள் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர். 

அரியலூரில் பட்டாசு வெடித்து அமமுகவினர் கொண்டாட்டம் 

முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தண்டனைக்காலம் முடிந்து சசிகலா அதிகாரபூர்வமாக விடுதலையாகிவிட்டார். இந்த செய்தியை தொண்டர்களுக்கும் தமிழக மக்களுக்கும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்க விரும்புகிறேன்.

அவர் பெங்களுருவிலேயே சிகிச்சை பெற்று ஓய்வு எடுத்தபின்னர் தமிழகம் வருவார். அவரது வருகைக்காக தொண்டர்கள், நிர்வாகிகள், மக்கள் காத்திருக்கிறார்கள். அவருக்கு தமிழகத்தில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்படும்'  என்று தெரிவித்தார். 

முழு கட்டுரையைப் படிக்க →