நாளை தமிழகம் வருகிறார் ஜெ.பி.நட்டா
பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா நாளை இரவு தமிழகம் வருகிறார்.
தமிழ்நாடுநாளை தமிழகம் வருகிறார் ஜெ.பி.நட்டா
பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா நாளை இரவு தமிழகம் வருகிறார்.
பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா நாளை இரவு தமிழகம் வருகிறார்.
தமிழகம் வரும் அவர் ஜன.30ம் தேதி மாலை 5.15 மணிக்கு முக்கிய நபர்களுடன் தேநீர் விருந்தில் பங்கேற்கிறார். மேலும் அன்றைய தினம் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அவர் சாமி தரிசனம் செய்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து ஜெ.பி.நட்டா, ஜன.31-ஆம் தேதி புதுச்சேரிக்கு தனி விமானத்தில் செல்கிறார். காலை 11 மணிக்கு புதுவை பேரவை அருகேயுள்ள பாரதியாா் சிலைக்கு மாலை அணிவிக்கிறாா்.
பின்னா், 11.15 மணி அளவில் ஏஎப்டி திடலில் நடைபெறும் பாஜக பொதுக் கூட்டத்தில் அவா் சிறப்புரை ஆற்றுகிறாா். முன்னதாக ஜெ.பி.நட்டா கடந்த ஜனவரி 14 ஆம் தேதி தமிழகம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.