முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று புதிதாக 503 பேருக்கு கரோனா

தமிழகத்தில் இன்று புதிதாக 503 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:24 PM
கோப்புப்படம்
பகிர்:

தமிழகத்தில் இன்று புதிதாக 503 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், இன்று புதிதாக 503 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,36,818ஆக உயர்ந்துள்ளது. 
அதிகபட்சமாக சென்னையில் 15 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது மருத்துவமனையில் 4,629 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கரோனாவுக்கு இன்று மேலும் 6 பேர் பலியாகியுள்ளனர். 
இதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 12,339 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று 544 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 8,19,850 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
தமிழகத்தில் 31ஆவது நாளாக ஆயிரத்திற்கும் கீழ் கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments