திருத்தணி முருகன் 
தமிழ்நாடு

திருத்தணி முருகன் கோவிலில் தைப்பூசம் கோலாகலம்: 3 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்

முருகனின் ஐந்தாம்படை வீடான திருத்தணி முருகன் கோவிலில் தைப்பூசம் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. பக்கதர்கள் 3 ணி நேரம் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர். 

DIN


திருத்தணி: முருகனின் ஐந்தாம்படை வீடான திருத்தணி முருகன் கோவிலில் தைப்பூசம் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. பக்கதர்கள் 3 ணி நேரம் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர். 

திருத்தணி முருகன்

முருகனின் ஐந்தாம்படை வீடாக சிறந்து விலங்கும் திருத்தணி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தைப்பூசத்தையொட்டி வியாழக்கிழமை அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டு தங்க, வைர ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு தீபாராணை நடைபெற்றது. 

இதேபோல் உற்சவர், சண்முகருக்கும் சிறப்பு  பூஜைகள் செய்யப்பட்டு மலர் அலங்காரம் காட்சி அளித்தார். 

சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்கள்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் காவடிகளுடன் முருகனின் திருவருள் பாடல்கள் இசைத்துக்கொண்டு மலைக்கோவிலில் குவிந்ததால், விழாக்கோலம் பூண்டு காணப்பட்டது. 

பொது வழியில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலையில் ரூ.150 மற்றும் 100 சிறப்பு தரிசனத்திற்கு செல்லும்  கவுண்டர்களிலும் பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தினர். 

பொது வழியில் சென்று சுவாமி தரிசனத்திற்கு சுமார் மூன்று மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் முருகப்பெருமானை தரிசித்து காவடி செலுத்தி வழிப்பட்டனர். 

மாலை உற்சவர் மயில் வாகனத்தில் மலைக்கோவில் மாட வீதியில் உலா நடைபெற உள்ளது.

காலை முதல் மாலை வரை ஒரு லட்சத்திற்கு  மேற்ப்பட்ட பக்தர்கள் முருகப்பெருமானை தரிசித்ததாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.  

விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் வே. ஜெயசங்கர், இணை ஆணையர் நா. பழனிகுமார் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமித் ஷா-வை சந்திக்கக் காரணம்…: EPS விளக்கம்! | செய்திகள்: சில வரிகளில் | 17.09.25

ஜெர்மனியில் செந்தேன்... சிவாங்கி!

நட்புக்குள்ளே.... சத்யா தேவராஜன்!

பிரதமர் மோடிக்கு பிரிட்டன் மன்னர் அளித்த பிறந்தநாள் பரிசு! என்ன தெரியுமா?

விலை குறையும் ஸ்விஃப்ட், டிசையர், பலேனோ, ஃபிராங்க்ஸ், பிரெஸ்ஸா வாகனங்கள்!

SCROLL FOR NEXT