சென்னையில் கரோனா சிகிச்சையில் 1,582 பேர்
சென்னையில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி கரோனா பாதித்து 1,582 பேர் சிகிச்சையில் உள்ளனர். இது ஒட்டுமொத்த பாதிப்பில் ஒரு சதவீதமாகும்.
சென்னையில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி கரோனா பாதித்து 1,582 பேர் சிகிச்சையில் உள்ளனர். இது ஒட்டுமொத்த பாதிப்பில் ஒரு சதவீதமாகும்.
சென்னையில் ஒட்டுமொத்தமாக இதுவரை 2,30,834 பேருக்கு கரோனா பாதித்த நிலையில், இவர்களில் சுமார் 98 சதவீதம் பேர் அதாவது 2,25,156 பேர் குணமடைந்துள்ளனர். கரோனா பாதித்தவர்களில் 4,096 பேர் பலியாகிவிட்டனர்.
சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 197 பேரும், தேனாம்பேட்டையில் 179 பேரும் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதுவரை பலியானாவர்களில் அதிகபட்சமாக தேனாம்பேட்டையில் 508 பேர் பலியாகியுள்ளனர்.
இதுவரை கரோனா பாதித்தவர்களில் 58.66 சதவீதம் பேர் ஆண்கள், 41.34% பேர் பெண்களாவர். அதேவேளையில், கரோனா பாதித்தவர்களில் 50 - 59 வயதுக்குள்பட்டவர்களே அதிகம். இவர்களது எண்ணிக்கை 17.59 சதவீதமாக உள்ளது.
மண்டல வாரியாக..