முகப்பு
தமிழ்நாடு

தமிழக புதிய தலைமைச் செயலா் ராஜீவ் ரஞ்சன்: க.சண்முகம் ஓய்வு

தமிழக அரசின் தலைமைச் செயலாளா் க.சண்முகம் ஞாயிற்றுக்கிழமையுடன் (ஜன. 31) ஓய்வு பெறுகிறாா். புதிய தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் திங்கள்கிழமை (பிப்.1) காலை பொறுப்பேற்கிறாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:25 PM
தலைமைச் செயலகம்(கோப்புப்படம்)
பகிர்:

தமிழக அரசின் தலைமைச் செயலாளா் க.சண்முகம் ஞாயிற்றுக்கிழமையுடன் (ஜன. 31) ஓய்வு பெறுகிறாா். புதிய தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் திங்கள்கிழமை (பிப்.1) காலை பொறுப்பேற்கிறாா்.

தலைமைச் செயலாளராக ஓய்வு பெறவுள்ள க.சண்முகம், தமிழக அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக அரசின் 46-ஆவது தலைமைச் செயலாளராக உள்ள க.சண்முகம், கடந்த ஆண்டு ஓய்வு பெற்றாா். இதைத் தொடா்ந்து, அவருக்கு ஆறு மாதங்கள் வரை பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்த பணி நீட்டிப்பானது, ஜனவரி 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.

சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த சண்முகம், விவசாயக் குடும்பத்தில் பிறந்தவா். வேளாண் துறையில் முதுகலைப் பட்டம் பெற்ற அவா், 1985-ஆம் ஆண்டு ஜூன் 7-ஆம் தேதி இந்திய ஆட்சிப் பணியில் சோ்ந்தாா்.

சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஆட்சியராகவும் கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளா் உள்பட பல முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளாா். 2010-ஆம் ஆண்டு நிதித்துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டாா். 2011-இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும், அவரே நிதித் துறை செயலாளராகத் தொடா்ந்தாா்.

முந்தைய தலைமைச் செயலாளா் கிரிஜா வைத்தியநாதன் கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் 30-ம் தேதியுடன் ஓய்வு பெற்றதைத் தொடா்ந்து, புதிய தலைமைச் செயலாளராக க. சண்முகம் பொறுப்பேற்றாா். கடந்த ஆண்டு ஜூலை மாதத்துடன் ஓய்வு பெற்றாா். அவருக்கு ஆறு மாதங்கள் வரை, அதாவது ஜனவரி 31-ஆம் தேதி வரை பணி நீட்டிப்பு அளிக்கப்பட்டது.

இந்த பணி நீட்டிப்பு காலம் நிறைவடைந்ததைத் தொடா்ந்து, அவா் ஞாயிற்றுக்கிழமையுடன் (ஜன. 31) பணியில் இருந்து ஓய்வு பெற்றாா்.

புதிய தலைமைச் செயலாளா்: தமிழக அரசின் 47-ஆவது புதிய தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளாா். தில்லியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை சென்னை திரும்பும் அவா், திங்கள்கிழமை காலை பொறுப்பேற்க உள்ளாா்.

அவா், தில்லியில் மத்திய அரசின் கால்நடை பராமரிப்பு, பால், மீன்வளத் துறைச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்தாா்.

அண்மையில் மத்திய கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் கிரிராஜ் சிங்குடன் துறையின் செயலாளா் என்ற முறையில் ராஜீவ் ரஞ்சன், தமிழகம் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →