முகப்பு
தமிழ்நாடு

அதிமுகவை சசிகலா மீட்டெடுப்பதை யாராலும் தடுக்க முடியாது: நமது எம்.ஜி.ஆர் கருத்து

சசிகலா தலைமையில் அதிமுகவை மீட்டெடுக்கப்போவசை யாராலும் தடுக்க முடியாது என நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் கருத்து தெரிவித்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:25 PM
சசிகலா
பகிர்:

 
சசிகலா தலைமையில் அதிமுகவை மீட்டெடுக்கப்போவசை யாராலும் தடுக்க முடியாது என நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் கருத்து தெரிவித்துள்ளது. 

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, வருமானத்துக்குப் பொருந்தாத சொத்து சோ்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை முடிந்து பெங்களூரு சிறையிலிருந்து புதன்கிழமை விடுவிக்கப்பட்டாா்.

சிறையிலிருந்து சசிகலா விடுதலையானதைத் தொடா்ந்து அவரை வரவேற்கும் வகையில் வாழ்த்து தெரிவிப்பது, சுவரொட்டி ஒட்டுவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடும் அதிமுகவினா் மீது கட்சித் தலைமை ஒழுங்கு நடவடிக்கை எடுத்து வருகிறது.

கடந்த 20-ஆம் தேதி சசிகலாவுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதையடுத்து, அவர் பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகிறார். அவர் சில தினங்களில் இல்லம் திரும்புவார் என கூறப்படுகிறது. 

இதனிடையே, அதிமுகவில் சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்க்கவோ, அதிமுக - அமமுக இணைப்புக்கோ வாய்ப்பில்லை என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் 'சசிகலா தலைமையில் அதிமுக மீட்கப்படுவதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது' என அமமுகவின் நாளேடான ‘நமது எம்ஜிஆர்’ கருத்து தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் அதிகாரப்பூர்வ நாளிதழ் நமது எம்.ஜி.ஆர் வெளியிட்டுள்ள கட்டுரையில், "எத்தனை செய்ய தீய சக்திகளோடு சேர்ந்து துரோக கூட்டங்கள் நடத்தினாலும், அவை அனைத்தும் புஸ்வாணமாகிவிடும். சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பதற்கு 100 சதவீதம் வாய்ப்பில்லை என மனசாட்சியை விற்றுவிட்டு பேதுவதா?  சிம்மாசனத்தில் அமரவைத்தவருக்கு காட்டும் விசுவாசம் இதுதானா? பதவி கிடைத்ததும் சந்தர்ப்பவாத அரசியல் நடத்துவோருக்கு துரோகிகளுக்கு நாவடக்கம் வேண்டும், சசிகலா தலைமையில் அதிமுகவை மீட்டெடுக்கப்போவதை யாராலும் தடுக்க முடியாது, உண்ட வீட்டிற்கே ரெண்டகம் செய்பவர்கள் வரலாற்றில் நம்பிக்கை துரோகிகள் என்ற அழைக்கப்படுவர் எனவும், 'தனியாக நின்று டெபாசிட் வாங்கக்கூட முடியாதவர்கள்' என்று பாஜகவையும் மறைமுகமாக விமர்சித்து நமது எம்ஜிஆர் நாளேடு கருத்து தெரிவித்துள்ளது.  

முழு கட்டுரையைப் படிக்க →