Youth body recovered in a ditch near Vedaranyam 
தமிழ்நாடு

வேதாரண்யம் அருகே வாய்க்காலில்  இளைஞர் சடலம் மீட்பு

வேதாரண்யம் அடுத்த  தலைஞாயிறு பகுதியில் வாய்க்காலில் மிதந்த இளைஞரின் சடலத்தை மீட்டு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.  

DIN

வேதாரண்யம் அடுத்த  தலைஞாயிறு பகுதியில் வாய்க்காலில் மிதந்த இளைஞரின் சடலத்தை மீட்டு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.  

தலைஞாயிறு காவல் நிலையம் அருகேயுள்ள ஜீவா நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் செல்லையன் மகன் மணிகண்டன்(24). இவர், அந்த பகுதியில் வெள்ளிக்கிழமை நடந்த துக்க நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார்.

அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற வெள்ளப்பள்ளம் கிராமத்தைச்  சேர்ந்த தனது உறவினர் ஒருவரை மாலையில் மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு வெள்ளப்பள்ளம் சென்றுள்ளார்.

வீடு திரும்பாத நிலையில் கிராமத்திற்குக் கொண்டுவிடச் சென்றவர் இரவு முழுவதும் வீடு திரும்பவில்லை. இதனிடையே, தலைஞாயிறு - வேட்டைக்காரனிருப்பு பிரதான சாலையின் குறுக்கே அரிச்சந்திரா நதி ஆற்றில் இருந்து பிரியும் பழையாற்றங்கரை ராஜன் வாய்க்காலில் மிதந்த சடலம்  மணிகண்டன் என்பது சனிக்கிழமை காலை தெரிய வந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் தலைஞாயிறு காவல் நிலையத்தில்  வழக்குப் பதிவு செய்த கவால்துறையினர், சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

நேஷனல் ஹெரால்டு அமலாக்கத் துறையால் ஜோடிக்கப்பட்ட வழக்கு: ப.சிதம்பரம்

தென்னாப்பிரிக்கா: துப்பாக்கிச் சூட்டில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி!

15 புதிய அரசு பேருந்துகள்! கொடியசைத்து துவக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் | நெல்லை | DMK

SCROLL FOR NEXT