சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ளது தனது இல்லத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கிவைத்து குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுத்த முதல்வர் பழனிசாமி. 
தமிழ்நாடு

போலியோ சொட்டு மருந்து முகாமை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

தமிழகம் முழுவதும் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை சென்னையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கிவைத்தார்.  

DIN


சென்னை: தமிழகம் முழுவதும் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை சென்னையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கிவைத்தார்.  

சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்தார். 

சொட்டு மருந்து போட்டுக்கொண்ட குழந்தைகளுக்கு இனிப்பு, பந்து, பொம்மைகளை வழங்கினார். குழந்தைகள் ஆர்வமுடன் பெற்றுக்கொண்டர்.

தமிழகம் முழுவதும் 43,051 மையங்களில் போலியோ மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் மருத்துவமனை, சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் 70.26  லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து போடப்படுகிறது.

கரோனா பாதிப்பு, அறிகுறிகள் உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோப்பையிலே என் குடியிருப்பு... செளந்தர்யா ரெட்டி!

மெல்லச் சிரித்தாள்... லாவண்யா!

பெலாரஸ் பறவை... ஸ்ரவந்திகா!

ஆற்றில் மூழ்கி இறந்த சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வா் அறிவிப்பு

இறந்தோரை வைத்து அற்ப அரசியல் செய்கிறது தவெக: ஆா்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT