முகப்பு
சொட்டு மருந்து போட்டுக் கொண்ட ஒவ்வொரு குழந்தைகளுக்கும் பரிசு பொருட்களை வழங்கினார் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தசாமி.
தமிழ்நாடு

சொட்டு மருந்து போடும் குழந்தைகளுக்கு பரிசு: கண்ணன்கோட்டை ஊராட்சி மன்ற தலைவரின் வினோத அறிவிப்பு

கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கண்ணன்கோட்டை ஊராட்சியில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் தினத்தையொட்டி போலியோ சொட்டு மருந்து போட்டுக் கொள்ளும் குழந்தைகளுக்கு பரிசு

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:25 PM
சொட்டு மருந்து போட்டுக் கொண்ட ஒவ்வொரு குழந்தைகளுக்கும் பரிசு பொருட்களை வழங்கினார் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தசாமி.
பகிர்:

கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கண்ணன்கோட்டை ஊராட்சியில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் தினத்தையொட்டி போலியோ சொட்டு மருந்து போட்டுக் கொள்ளும் குழந்தைகளுக்கு பரிசு வழங்கப்படும் என்று ஊராட்சிமன்றத் தலைவர் கோவிந்தசாமி அறிவித்ததைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள குழந்தைகள் ஒருவர் விடாமல் வந்து போலியோ சொட்டு மருந்து போட்டுக் கொண்டு பரிசை பெற்றுக் கொண்ட  சம்பவம் கும்மிடிப்பூண்டியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது.

கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கண்ணன்கோட்டை ஊராட்சியில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கோவிந்தராஜ் உத்தரவின்பேரில் கண்ணன்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வை ஒட்டி போலியோ சொட்டு மருந்து போட்டுக் கொள்ள வரும் குழந்தைகளுக்கு ஊராட்சி மன்றத்தின் சார்பாக பரிசளிக்கப்படும் என்று ஊராட்சிமன்றத் தலைவர் கோவிந்தசாமி அறிவித்திருந்தார். இதனை அறிந்த கண்ணன் கோட்டை பகுதி மக்கள் அவரவர் வீடுகளிலிருந்து குழந்தைகளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு வந்து போலியோ சொட்டு மருந்து போட்டுக் கொண்டனர்.

தொடர்ந்து சொட்டு மருந்து போட்டுக் கொண்ட ஒவ்வொரு குழந்தைகளுக்கும் பரிசு பொருட்களை ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தசாமி வழங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தசாமியின் இந்த செயலை சுகாதாரத்துறையினர் மட்டுமல்லாது, பொதுமக்களும் உடுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த மக்களும் பெரிதும் பாராட்டினார்.

நிகழ்வில் ஊராட்சி துணை தலைவர், வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →