தமிழ்நாடு

கும்மிடிப்பூண்டியில் 20,033 குழந்தைகளுக்கு 130 மையங்களில் போலியோ சொட்டு மருந்து

DIN

கும்மிடிப்பூண்டியில் 20 ஆயிரத்து 33 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து இன்று தரப்படடுகிறது. 0 முதல் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் நிகழ்வு கும்மிடிப்பூண்டி வட்டார சுகாதாரத்துறை சார்பில் கும்மிடிப்பூண்டியில் நடைபெற்று வருகிறது.

கும்மிடிபூண்டி வட்டார மருத்துவர் டாக்டர் கோவிந்தராஜ் மேற்பார்வையில்  கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையம், ஆரம்பாக்கம் பேருந்து நிலையம் ,கவரப்பேட்டை பேருந்து நிலையம், மாதர்பாக்கம் பேருந்து நிலையம், சுண்ணாம்புகுளம் பேருந்து நிலையம் ,மற்றும் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம், எளாவூர் ரயில் நிலையம் , ஆரம்பாக்கம் ரயில் நிலையம் உள்ளிட்ட 130 மையங்களில் 20,033 குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்று வருகிறது.

கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் நிகழ்வை கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார் துவக்கி வைத்தார். நிகழ்வில் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன், உதவி ஆய்வாளர் ராஜேந்திரன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முருகதாஸ், பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் கோபி முன்னிலை வகித்தனர்.

அதே போல கண்ணன்கோட்டையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஊராட்சி தலைவர் கோவிந்தசாமி போலியோ சொட்டு மருந்து வழங்கும் நிகழ்வை துவக்கி வைத்தார்.

இந்த 130 போலியோ சொட்டு மருந்து முகாம்களில் கும்மிடிப்பூண்டி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கோவிந்தராஜ் தலைமையில் 12 மருத்துவர்கள் கண்காணிப்பில் 162 சுகாதார ஊழியர்கள், 189அங்கன்வாடி பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

தில்லியில் இந்த ஆண்டில் முதல் 5 மாதங்களில் சாலை விபத்து இறப்புகள் குறைவு: தரவுகள்

ஆம் ஆத்மி தலைவா்கள் முன்பு ‘நிா்பயா’வுக்கு நீதி கேட்டனா்; இன்று குற்றம்சாட்டப்பட்டவரை ஆதரிக்கிறாா்கள்: மாலிவால்

ஆம் ஆத்மி கட்சியை நசுக்க ‘ஆபரேஷன் ஜாடுவை’ செயல்படுத்தத் தொடங்கியுள்ளது பாஜக: முதல்வா் அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டு

தோ்தலில் வாக்காளா்கள் பங்கேற்பு சதவீதத்தை அதிகரிக்க 16 லட்சம் கையெழுத்திட்ட உறுதிமொழிகள்! தோ்தல் ஆணையம் முன்முயற்சி

SCROLL FOR NEXT