மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைப் பணி விரைவுப்படுத்தப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைப் பணி விரைவுப்படுத்தப்படும் என்று மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைப் பணி விரைவுப்படுத்தப்படும் என்று மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை, சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் பசுமை சைதைத் திட்டத்தின்கீழ் 95,001ஆவது மரக்கன்றை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று நட்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று 2015ஆம் ஆண்டு பிப்.28ஆம் நாள் ஒன்றிய அரசினால் அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு 2018ஆம் ஆண்டு ஜுன் 18 அன்று எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை மாவட்டம் தோப்பூரில் அமையும் இடம் தெரிவு செய்யப்பட்டது. ஒன்றிய அரசின் சார்பில் 2018ஆம் ஆண்டு டிசம்பர் 17அன்று ஒன்றிய அரசின் சார்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டு தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் தோப்பூரில் ரூ.1264 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 750 படுக்கை வசதிகள் கொண்ட எய்ம்ஸ் மருத்துவமனை 45 மாதங்களில் கட்டி முடிக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. பிரதமர் 2019ஆம் ஆண்டு ஜனவரி 27 அன்று மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய அடிக்கல் நாட்டினார். 11 மாதங்கள் கழித்து 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25அன்று ரூ.15 கோடி செலவில் சுற்றுச்சுவர் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. 2020ஆம் ஆண்டு நவம்பர் 3 அன்று மாநில அரசிடமிருந்து 224.24 ஏக்கர் நிலம் ஒன்றிய அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிதியை கடனாகப் பெறுவதற்கு JICA நிறுவனத்துடன் ஒன்றிய அரசு ஒப்பந்தம் கையெழுத்தானது. எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு நிதியை ஒப்பந்தம் செய்வதற்கே 6 ஆண்டுகள் விரையம் செய்யப்பட்டுள்ளது.
மே-7க்கு பிறகு தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் 2021ஆம் ஆண்டு ஜுன் மாதம் 5 தேதி எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென்று பிரதமருக்கு கடிதத்தின் வாயிலாக வலியுறுத்தினார்கள். ஜுன் 14, அன்று நேரில் சென்று பிரதமரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதன் அவசியம் குறித்து எடுத்துரைத்திருக்கிறார். ஆட்சிக்கு வந்த ஒன்றரை மாதங்களிலேயே எய்ம்ஸ் அமைவதற்கு தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார் முதல்வர். ஆனால் நேற்று தொலைக்காட்சியில், ஏதோ தமிழக அரசுதான் காலம் தாழ்த்துவதாக செய்திகள் வந்துகொண்டிருக்கிறது.
4-6-2021 அன்று ஒன்றிய அரசிடமிருந்து எய்ம்ஸ் 150 மருத்துவ மாணவர்கள் சேர்க்கை சம்பந்தமாக மூன்று நிபந்தனைகளை சொல்லியிருக்கிறார்கள். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணி முடியும் வரை ஒன்று, புதுவையில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் 150 மருத்துவ மாணவர்களை மருத்துவம் பயில அறிவுறுத்தல். இரண்டாவது மதுரை மாவட்டத்தில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மருத்துவம் அல்லாத கலைக்கல்லூரியில் சேர்ப்பது மூன்றாவது மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அந்த 150 மருத்துவ மாணவர்களை சேர்த்து மருத்துவம் பயிலலாம் என்று
மூன்று நிபந்தனைகளை அறிவுறுத்தியிருக்கிறது.
இது குறித்து தமிழக அரசு மருத்துவ வல்லுநர்களுடன் ஆராய்ந்து ஒன்றிய அரசிற்கு முடிவு அறிவிக்கப்படும். இந்த மூன்று விசயங்களுமே சாத்தியமில்லாதது, ஏனென்றால் ஜிப்மரில் சேர்ப்பதென்பது பக்கத்து மாநிலத்தில் போய் மாணவர்களை சேர்த்தால் சாத்தியப்படாதது. அதேபோல் மதுரை மாவட்டத்தில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஏற்கெனவே 250 மாணவர்கள் படித்துக்கொண்டுள்ளனர். அவர்களோடு இந்த 150 மாணவர்களும் சேர்ந்தால் 400
மாணவர்கள் படிக்க வேண்டும் என்ற நிலையாகிவிடும். அதற்கான மருத்துவ கட்டடமைப்பு அங்கு இல்லை. அதேபோல் கலைக்கல்லூரியிலும் மருத்துவ மாணவர்களை சேர்த்து பயில வைப்பது என்பது சரியான விசயம் கிடையாது.
ஆனால் மதுரை, தேனி, சிவகங்கை மாவட்டங்களில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் ஒரு மருத்துவ கல்லூரிக்கு 50 மாணவர்கள் என்ற அளவில் 150 மாணவர்களை மருத்துவம் பயில அனுமதிக்கலாமா? அல்லது தூத்துக்குடி, திருச்சி, மதுரை, தேனி, சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் தலா 30 மாணவர்கள் வீதம் 150 மாணவர்களையும் மருத்துவ சேர்க்கை செய்யலாமா? என்பது குறித்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டு பின்னர் தமிழக அரசின் சார்பில் விரைவில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.
JICA நிறுவனத்துடன் ஒன்றிய அரசு 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17ஆம் நாள் ரூ.1264 கோடி நிதியில் 45 மாதங்களில் கட்டி முடிப்பதற்கு அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் JICA நிறுவனம் 71 மாதங்கள் எந்தெந்த நிலையில் நிதி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. மூன்று ஆண்டுகளில் முடிக்க வேண்டிய பணிக்கு, ஆனால் இப்போது திருத்திய மதிப்பீட்டுத் தொகை வெளியிடப்பட்டு, ஒன்றிய அரசு JICA நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு, டெண்டருக்கு பிறகு உலகலாவிய நிறுவனங்கள் பங்கேற்று அதற்கு பிறகு பணிகள் தொடங்கப்படும்.
அதிமுக அரசு சார்பில் ஒன்றிய அரசிற்கு சரியான அழுத்தம் கொடுக்கப்பட்டிருந்தால் பணிகள் நிறைவடைந்திருக்கும். ஆனால் முதல்வர் தலைமையில் ஆட்சிப்பொறுப்பேற்றவுடன் கடந்த ஒன்றரை மாதங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை விரைவில் தொடங்க தேவையான நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளன. நிச்சயமாக இந்த ஆட்சியில் கண்டிப்பாக, ஒன்றிய அரசு ஒப்புதலுடன் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.