முகப்பு
தமிழ்நாடு

தேசிய மருத்துவர்கள் தினம்: சங்ககிரி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கௌரவிப்பு 

சங்ககிரி அரசு தலைமை மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களின் சேவையைப் பாராட்டி மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி மருத்துவமனை வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. 

Updated On : 1 ஜூலை, 2021 at 3:12 PM
தேசிய மருத்துவர் தினத்தினையொட்டி பசுமை சங்ககிரி அமைப்பின் சார்பில் சங்ககிரி அரசு தலைமை மருத்துவ அலுவலர் திருமாவளவனிடம் மரக்கன்றுகளை அளித்து வாழ்த்து தெரிவிக்கிறார் அமைப்பின் நிர்வாகி பசுமை சீனிவாசன். 
பகிர்:

சங்ககிரி : தேசிய மருத்துவர் தினத்தினையொட்டி சேலம் மாவட்டம், சங்ககிரி, பசுமை சங்ககிரி அமைப்பின் சார்பில் சங்ககிரி அரசு தலைமை மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களின் சேவையைப் பாராட்டி மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி மருத்துவமனை வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. 

பசுமை சங்ககிரி அமைப்பின் சார்பில் அதன் நிர்வாகி பசுமை சீனிவாசன் சங்ககிரி அரசு தலைமை மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களின் சேவைகளை பாராட்டி அவர்களை கௌரவிப்பதற்காக  பத்து நாட்டு கொய்யா மரக்கன்றுகளை மருத்துவ அலுவலர் திருமாவளவனிடம் வழங்கினார். மருத்துவர்கள் சுரேஷ், முருகேவல் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.