முகப்பு
தமிழ்நாடு

நீட் தேர்வு பாதிப்புகளை கண்டறிய நீதிபதி தலைமையில் குழு: பாஜக தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ய கோரி மனு

நீட் தேர்வு பாதிப்புகளை கண்டறிவதற்காக  நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு எதிராக பாஜக சார்பில் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ய கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்

தமிழ்நாடு

நீட் தேர்வு பாதிப்புகளை கண்டறிய நீதிபதி தலைமையில் குழு: பாஜக தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ய கோரி மனு

நீட் தேர்வு பாதிப்புகளை கண்டறிவதற்காக  நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு எதிராக பாஜக சார்பில் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ய கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:32 AM
பகிர்:

சென்னை: நீட் தேர்வு பாதிப்புகளை கண்டறிவதற்காக  நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு எதிராக பாஜக சார்பில் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ய கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், தமிழகத்தில் நீட் தேர்வு ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், 9  பேர் அடங்கிய குழுவை நியமித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த அரசாணையை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் இந்த வழக்கை ரத்து செய்ய கோரி மாணவி நந்தினி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில்,  நீட் தேர்வு பாதிப்புகளை கண்டறிய அமைக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி தலைமைலான  குழு பாதிப்புகளை ஆய்வு செய்து , அந்த முடிவுகளை அரசிடம் அளிக்க உள்ளது. இதனால் யாருடைய உரிமைகளும் பாதிக்கப்படப் போவது இல்லை. மேலும் மாணவர்கள் பிரச்னைகளில் அரசியல்வாதிகளுக்கு இடமில்லை. இந்த வழக்கு அரசியல் உள்நோக்கத்தோடு தொடரப்பட்டுள்ளது. எனவே வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரியிருந்தார். 

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க கோரி தலைமை நீதிபதி அமர்வு முன் மாணவி தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பி.வில்சன் முறையிட்டார். வரும் திங்கள்கிழமை (ஜூலை 5) வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →