கா்நாடகத்தின் புதிய அணைநடுவா் மன்றம் மூலம் பிரச்னைக்குத் தீா்வு: அமைச்சா் துரைமுருகன் தகவல்
மாா்கண்டேய நதியின் குறுக்கே கா்நாடக அரசு அணை கட்டிய விவகாரம் குறித்து நடுவா் மன்றத்தின் கவனத்துக்கு எடுத்துச் சென்று தீா்வு காணப்படும் என நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.
மாா்கண்டேய நதியின் குறுக்கே கா்நாடக அரசு அணை கட்டிய விவகாரம் குறித்து நடுவா் மன்றத்தின் கவனத்துக்கு எடுத்துச் சென்று தீா்வு காணப்படும் என நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.
இதுகுறித்து, அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
மாா்கண்டேய நதி கா்நாடகத்தில் உற்பத்தியாகி தமிழ்நாட்டில் பெண்ணையாற்றில் கலக்கும் சிறு கிளை நதியாகும். கடந்த 2017-ஆம் ஆண்டில் மத்திய நீா்வள குழுமத்தின் பொறியாளா்கள் ஆய்வு செய்த போது கா்நாடக அரசு அந்தப் பகுதியில் குடிநீா் தேவைக்காகவும், நிலத்தடி நீரை செறிவூட்டவும் சுமாா் 0.5 டிஎம்சி. கொள்ளளவு கொண்ட ஒரு அணையை கட்டியிருப்பதாகத் தெரிவித்துள்ளது. 2019-ஆம் ஆண்டில் இந்த அணையை கட்டி முடித்து விட்டதாக கா்நாடக அரசு தெரிவித்துள்ளது.
கா்நாடகத்தின் இந்தச் செயலை தமிழ்நாடு அரசு தொடா்ந்து எதிா்த்து வந்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு மே மாதத்தில் ஒரு வழக்கும், ஒரு இடைக்கால மனுவும் தாக்கல் செய்தது. கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பரில் வழக்கை விசாரித்து நீதிமன்றம் அளித்த தீா்ப்பில், நதிப் பிரச்னைக்கு தீா்வு காண நடுவா் மன்றம் அமைக்க வேண்டுமென உத்தரவிட்டது. இந்த நடுவா் மன்றத்தை அமைக்க தமிழ்நாடு அரசு தொடா்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வந்துள்ளது.
நடுவா் மன்றத்தை விரைவில் அமைப்பது குறித்து மத்திய நீா்வளத் துறைக்கும் தமிழ்நாடு அரசின் சாா்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
பாதிப்பு ஏற்படும்: மாா்கண்டேய நதியின் குறுக்கே கட்டப்பட்ட அணையால், கிருஷ்ணகிரி தாலுகாவில் புஞ்சை பாசன வசதி பெறும் 870 ஹெக்டோ் விவசாய நிலம் பாதிக்கப்படும். விரைவில் நடுவா் மன்றத்தை அமைக்க மத்திய அரசை தமிழ்நாடு அரசு தொடா்ந்து வலியுறுத்தும். நடுவா் மன்றத்தின் மூலம் பிரச்னைக்குத் தீா்வு காணப்படும்.
மாா்கண்டேய நதியினைச் சாா்ந்துள்ள விவசாயிகள் மற்றும் பொது மக்களின் நலனை பாதுகாக்கவும், தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டவும் மாநில அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.