நட்டாவுடன் தமிழக பாஜக எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு
பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவை தமிழக பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் நேரில் சந்தித்து சனிக்கிழமை வாழ்த்து பெறவுள்ளனர்.
தமிழ்நாடுநட்டாவுடன் தமிழக பாஜக எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு
பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவை தமிழக பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் நேரில் சந்தித்து சனிக்கிழமை வாழ்த்து பெறவுள்ளனர்.
பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவை தமிழக பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் நேரில் சந்தித்து சனிக்கிழமை வாழ்த்து பெறவுள்ளனர்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டவர்களில் வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், சரஸ்வதி, எம்.ஆர்.காந்தி ஆகிய 4 பேர் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில், தில்லியில் இன்று பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவை, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் 4 எம்.எல்.ஏ.க்களும் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இந்த சந்திப்பின்போது, மாநிலத்தில் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் மாநில அரசியல் சூழல் குறித்து விவாதிக்கப்பட்டது.
முன்னதாக, இன்று காலை பிரதமர் மோடியை நேரில் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.